மாங்காடு கோவிலில் பெண்கள் உறுதிமொழி
ADDED :2550 days ago
மாங்காடு:அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சி சார்பில், காஞ்சி மண்டல தலைவர், ஆனந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் முன் நேற்று (அக்., 7ல்) திரண்டனர்.அப்போது, கோவிலுக்குள் சென்று, விளக்கு ஏற்றி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்வோம்; மற்ற வயது பெண்கள் செல்ல மாட்டோம் என, உறுதிமொழி எடுத்தனர்.