உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டியில் மழை வேண்டி அய்யனார் சுவாமிக்கு குதிரை எடுப்பு விழா

தேவதானப்பட்டியில் மழை வேண்டி அய்யனார் சுவாமிக்கு குதிரை எடுப்பு விழா

தேவதானப்பட்டி:சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் ஆயக்கட்டு சங்கம் சார்பில், மழை வேண்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.

சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் ஆயக்கட்டு சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புரட்டாசியில் மழைவேண்டி அய்யனார் கோயில் விழாவில் குதிரை எடுப்பு ஊர்வலம் நடக்கும். இந்தாண்டில் அய்யனார் குதிரை செய்யப்பட்டு மேலத்தெருவில் உள்ள வேளார் வீட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஞ்சநேயப் பெருமாள் கோயிலில் குதிரைகளுக்கு கண் திறக்கப்பட்டது. அதன் பின், கடைவீதி மற்றும் தெருக்களில் குதிரைஓட்ட நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு அய்யனார் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் காமையா, நடராஜன், வீரமணிஆகியோர்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !