உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக போலீஸ் உதவி மையம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக போலீஸ் உதவி மையம்

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, போலீஸ் உதவி மையம், போலீசார் அமைத்துள்ளனர்.

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இன்று, 8ம் தேதி புரட்டாசி அமாவாசை என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக, நேற்று (அக்., 7ல்)முக்கோணம் பகுதியில் ஆனைமலை போலீசார், உதவி மையம் அமைக்கும் பணியை துவக்கினர். நேற்று (அக்.,7ல்) இரவு முதல், 50 போலீசார் மற்றும் 30 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டனர்.

அதேபோல், கோவில் நிர்வாகத்தினர் கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்குள், மூங்கில் குச்சிகளில் தடுப்புகள் அமைக்கும் பணியை செய்தனர். மக்கள் எவ்வித பிரச்னையாக இருந்தாலும், போலீஸ் உதவி மையத்தை அணுகலாம் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !