உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை நினைத்ததை நிறைவேற்றும் காளியம்மன்

அருப்புக்கோட்டை நினைத்ததை நிறைவேற்றும் காளியம்மன்

அருப்புக்கோட்டை: மனித வாழ்க்கையில் எண்ணிலடங்கா துயரங்கள் வரும் போது, வேறு வழியில்லாமல் நாடி செல்வது சுவாமி சன்னதி. அந்த இக்கட்டான தருணத்தில் தான் "கடவுளை மனமுருக வேண்டி, தனக்கு வழி காட்டும்படி வழிபடுவான். வேண்டியதை நிறைவேற்றி தருபவர் தான் கடவுள். நாம் நினைத்ததை நல்லபடியாக நடக்க சுவாமியை
வழிபடும் போது, கனவில் வந்து நினைத்தது நடக்கும் என்று கூறி வரம் தரும் அம்மன் கட்டங்குடியில் உள்ள வீர மகா காளியம்மன்.அருப்புக்கோட்டையிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் உள்ளது கட்டங்குடி. 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஓடிய ஆற்றில் மிதந்து வந்து புதரில் கிடந்தது வீர மகா காளியம்மன் சிலை. இதை பார்த்த அவ்வூர் மக்கள் சிலையை எடுத்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவதாக வரலாறு உள்ளது. குடும்ப பிரச்னை, கடன், திருமண பிரச்னை என

வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளவர்களின் அனைத்து  பிரச்னைகளையும் அம்மன் தீர்த்து வைக்கிறார். அம்மனை மனமுருக வேண்டி வணங்கும் போது, நமக்கு நடக்க உள்ளதை அம்மன் கனவில் வந்து செல்வதாக பலன் மற்றும் பயன் பெற்றோர் கூறுகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் அம்மனை வழிபட வருகின்றனர். கோயில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்து இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !