முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருத்தேரோட்டம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று தேர்திருவிழா நடந்தது. அதையொட்டி கடந்த 2ம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் மகாபிஷேகமும், இரவு சாமி வீதியுலா நடந்தது. தைப்பூச திருநாளான நேற்று காலை 9.30 மணிக்கு ரதாரோஹணமும், 10 மணிக்கு திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருத்தேரை சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் குமாரசாமி கோவில் தெரு, தியாக செட்டித்தெரு, வண்டிக்கார தெரு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.இன்று சுவே நதிக்கரையில் தைப்பூச தீர்த்தவாரி, காவடி புறப்பாடு நடக்கிறது. 11 மணிக்கு மகாபிஷேகமும், அன்னதானமும், இரவு மயில் வாகனத்தில் சாமி வீதியுலா காட்சி நடக்கிறது.