உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி பெருமாள் கோவில்களில் பூஜை

தர்மபுரி பெருமாள் கோவில்களில் பூஜை

தர்மபுரி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை, அபி?ஷக அலங்காரங்கள் நடந்தன. தர்மபுரி அடுத்த, செட்டிக்கரை ஸ்ரீபெருமாள் சுவாமி கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு  சுவாமிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவிலில், சுவாமிக்கு  சிறப்பு அபி?ஷகங்கள் செய்து, வெள்ளிக் கவச அலங்காரம் சாத்தப்பட்டது. இதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி கோவில், அதகபாடி லஷ்மி நாராயணசுவாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உட்பட,  மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !