கரூர், தெரசம்மாள் ஆலய தேர் திருவிழா
ADDED :2631 days ago
கரூர்: கரூர், புனித தெரசம்மாள் ஆலயத்தின், 88வது ஆண்டு தேர்த் திருவிழா, நேற்று (அக்., 14ல்), இரவு வாண வேடிக்கையுடன் நடந்தது. பிரசித்தி பெற்ற, புனித தெரசம்மாள் ஆலயத்தில் கடந்த, 5ல் கொடியேற்றத்துடன், தேர்த் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை ஆலயத்தில், செபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. நேற்றிரவு (அக்., 14ல்), 7:30 மணிக்கு, தேர்த்திருவிழா துவங்கியது.
இதில், கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், பங்கு தந்தை ராயப்பன் மற்றும் பங்கு மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். வரும், 21ல், கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.