சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
ADDED :2549 days ago
சபரிமலை: சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம், மேலும் தீவிரமடைந்துள்ளது. கொந்தளிப்பான சூழல் நிலவியதால், நிலக்கல், பம்பை, சன்னிதானம், இலவங்கல் உள்ளிட்ட பகுதிகளில்,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போராட்டம் இன்றும் நீடிப்பதால் பந்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவை ஏற்று 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்: சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் வரை வந்த பெண்களுக்கு எதிராக உதவி அர்ச்சகர்கள் 18ம் படி அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.