வடமதுரையில் நவராத்திரி உற்ஸவத்தில் அம்பு வீசிய பெருமாள்
ADDED :2547 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா அக்., 10-ல் துவங்கியது. நாள்தோறும் வெவ்வேறு மண்டகப்டிதாரர்களால் நவராத்திரி கொழு உற்ஸவ வழிபாடு நடந்தது.
பத்தாம் நாளான நேற்று (அக்., 19ல்) மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகள் வழியே நகர் வலம் வந்தார். திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி சென்று பாரிவேட்டை அம்பு வீசும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் கணபதிமுருகன், தக்கார்
மகேஸ்வரி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். வடமதுரை மீனாட்சி அம்மன் கோயிலி லும் 10 நாட்கள் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது.