உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் உஜ்ஜையினி மகாளியம்மன் கோயிலில் பூக்குழி விழா

ராமேஸ்வரம் உஜ்ஜையினி மகாளியம்மன் கோயிலில் பூக்குழி விழா

ராமேஸ்வரம்: நவராத்திரி விழாயொட்டி, ராமேஸ்வரம் உஜ்ஜையினி மகாளியம்மன் கோயிலில் பூக்குழி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதசுவாமி கோயிலில் அக்., 9 முதல் அக்., 18 வரை விழா நடந்தது. விஜயதசமியான அக்.,19ல் திருக்கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி மகர்நோம்பு திடலில் அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து உஜ்ஜையினி  மகாளியம்மன் கோயில் முன்பு தீ குண்டம் வளர்த்து அதில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின் உஜ்ஜையினி அம்மனுக்கு நடந்த மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !