ராசிபுரம் பண்ணையம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2591 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, பண்ணையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ராசிபுரம் அடுத்த, ஏழூர் நாடு கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா, நவசண்டி ஹோம விழா, பொங்கல் விழா ஆகியவை நடந்தன.
மண்டல பூஜையின், 48வது நாள் நிறைவையொட்டி, மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, 108 கலசபிஷேக பூஜை, சுவாமி ஊர்வலம் நடந்தது. நவசண்டி ஹோமத்தையொட்டி மகா கணபதி, நவக்கிரக ஹோமங்கள் பாராயணம், பண்ணையம்மனுக்கு கலச அபிஷேகம், தீபாராதனை; நேற்று முன்தினம், (அக்., 21ல்) பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, சுவாமி ஊர்வலம், வாண வேடிக்கை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.