உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வலம் வந்தனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலப்பாதை, 6 கி.மீ., தூரம் கொண்டது.

நேற்று (அக்., 24ல்) பவுர்ணமியாதலால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலை வலம் வந்தனர். மலையடிவாரம் ஆறுமுக சுவாமி திருக்கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம் மன் கோவில், நாமக்கல் சாலை, பச்சியம்மன் கோவில், மலைசுத்தி சாலை, வாலரைகேட், ப.வேலூர் ரோடு, சின்னஓங்காளியம்மன் கோவில், தெற்குரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை வந்தடைந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* திருச்செங்கோடு, கைலாசநாதர் கோவிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சாப்பாடு, காய்கறிகள் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !