உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் உபகோவில்களில் ஒன்றான, சொக்கம்மன் கோவில், கிரிவல பாதையில் அமைந்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதன் நிறைவை ஒட்டி, வருஷாபிஷேக விழா நேற்று (அக்.,24ல்) கோலாகலமாக நடந்தது. மூலவர் சொக்கம்மனுக்கு அபிஷேகம், தீப, தூப ஆராதனை, மலர் அர்ச்சனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, வேதகிரீஸ்வரர் மற்றும் சொக்கம்மன், திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர், குமரன் மற்றும் கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !