பொள்ளாச்சி அமைதி நகர் மதுரை வீரன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :2538 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அமைதி நகர் மதுரை வீரன் கோவிலில் நேற்று (அக்., 24ல்) திருக்கல்யண உற்சவம் நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர், அமைதி நகரில், மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலுக்கு பொதுமக்கள் சார்பில் மதுரைவீரன், வெள்ளையாம்மாள், பொம்மியம்மாள் ஐம் பொன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று (அக்., 24ல்) திருக் கல்யாண உற்சவம் நடந்தது.
பேரூர் ஆதீனம் சிவசாந்தலிங்க அருட்பணி மன்றத்தார் உற்சவத்தை நடத்தி வைத்தனர். விழா வில், சீர்வரிசைகளுடன் மக்கள் பங்கேற்று, திருவிளக்கு வழிபாடு செய்தனர். தேவாரம், திருவாச கம் முழக்கத்துடன் மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் திருக்கல்யாணம் நடந்தது.