உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரள முதல்வரை அய்யப்பன் வதம்: பக்தர்கள் பேனரால் பரபரப்பு

கேரள முதல்வரை அய்யப்பன் வதம்: பக்தர்கள் பேனரால் பரபரப்பு

நாகர்கோவில் : கேரள முதல்வரை, அய்யப்பன் சுவாமி வதம் செய்வது போன்ற பேனர் வைக்கப்பட்டதால், நாகர்கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதைக் கண்டித்து, தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில், போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்களும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, கேரளா முதல்வரை, அய்யப்பன் சுவாமி வதம் செய்யும் வகையிலான பேனர் வைக்கப்பட்டு உள்ளது.அதில், அரசியல் எனும் சாக்கடையை புனிதமாக வணங்கும் அய்யப்பனிடம் புகட்டுவதா என்ற வாசகங்களுடன், கேரள அரசை விமர்சித்தும், கேரள முதல்வர் பினராயி விஜயனை, அய்யப்பன் வதம் செய்வது போன்ற படமும் இடம் பெற்று உள்ளது.இதேபோன்று, மலையாள மொழியிலும், கேரள முதல்வர், அரசை விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பேனரை வைத்த நபர்கள் யார்? என, குமரி மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !