/
கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் கருப்பத்தூர்,ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்: சுதர்ஸன ஹோமம் பூஜை
கிருஷ்ணராயபுரம் கருப்பத்தூர்,ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்: சுதர்ஸன ஹோமம் பூஜை
ADDED :2536 days ago
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர், ஐயப்பன் கோவிலில் கும்பாபி ஷேக விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, துவக்க விழா பூஜை நடந்தது. கரூர், திருச்சி நெடுஞ்சாலை கருப்பத்தூர் கிராமத்தில், தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும், 28 ல் நடக்கிறது.
அதன் துவக்க விழா பூஜை நேற்று (அக்., 25ல்) காலையில் சுதர்ஸன ஹோம் பூஜையும், மாலையில் பகவத் சேவை பிம்ப பூஜையுடனும் நடந்தது. கருப்பத்தூர் சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று காலை, விஷ்ணு பூஜை, வாஸ்து பூஜை நடக்கிறது.