மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2532 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2532 days ago
திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஐப்பசி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, பொது வழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.சில பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர்.இதேபோல், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் மற்றும் அருங்குளம் கூட்டுச் சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் ஆகிய கோவில்களிலும், கிருத்திகை விழாவையொட்டி, பூஜைகள் நடந்தன.
2532 days ago
2532 days ago