சின்ன வயசு! பெரிய மனசு!
ADDED :2643 days ago
பன்னிரண்டு வயதிலேயே சிவனருள் பெற்றவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோயில்களை நிர்வகிக்கும் அதிகாரியாக கருதப்படும் இவரது சன்னதி, பிரகாரத்தில் உள்ள கோமுகி தீர்த்தத்தை ஒட்டி இருக்கும். சிவ வழிபாட்டுக்குரிய பலனை தருபவர் இவரே. கோயிலின் வரவு, செலவு கணக்கை இவரின் பெயரில் எழுதும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. இரவில் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு படைத்த நைவேத்யத்தில் நாலில் ஒரு பங்கை இவருக்கு படைப்பர். ’வயதில் சிறியவர்; செயலில் பெரியவர்’ (சிறிய பெருந்தகையார்) என்று இவரை பெரியபுராணம் போற்றுகிறது.