வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தல விருட்சம் சாய்ந்தது
ADDED :2532 days ago
நாகை: சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது நவகிரகங்களில் செவ்வாய் தலமான இத்தளத்தில் விருட்சமாக ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான வேம்பு மரம் இருந்தது. இந்த மரம் இன்று பெய்த கனமழையால் வேருடன் சாய்ந்தது. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடுமோ என பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
தலவிருட்சம் விழுந்ததையொட்டி கோவில் கிழக்கு கோபுர வாசல் நடை சாத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்த மரத்தில் கதண்டு வண்டுகள் உள்ளதால் பக்தர்கள் மேலக் கோபுர வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலின் தலவிருட்சம் வேருடன் சாய்ந்து அதை அடுத்து கோவிலில் பரிகார பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.