உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்திரராஜ பெருமாளுக்கு 10 நாட்கள் டோலோற்சவம்

சேலம் சவுந்திரராஜ பெருமாளுக்கு 10 நாட்கள் டோலோற்சவம்

சேலம்: ஆண்டுதோறும், ஐப்பசி மாதத்தில் பெருமாளுக்கு, 10 நாட்கள் நடக்கும், ’டோலோற்சவம்’ என்ற ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது.சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் மற்றும் தாயாருக்கு ஆண்டு முழுவதும், ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் இங்கும் நடத்தப்பட்டு வருகிறது. ஐப்பசியில் நடக்கும் டோலோற்சவம் கடந்த, 27ல் துவங்கியது. நாள்தோறும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருள செய்து, நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவில் முக்கிய நிகழ்வான, சவுந்திரவல்லி தாயாருடன் சவுந்திரராஜர் இணைந்து ஊஞ்சலில் அருள்பாலிக்கும், ’சேர்த்தி’ சேவை நாளை (நவ.2) நடக்கவுள்ளது. வரும், 6ல், தீபாவளியன்று சாற்றுமுறையுடன் டோலோற்சவம் நிறைவு பெறும். ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி உள்ளிட்ட உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !