உலக நன்மைக்காக 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்!
ADDED :4993 days ago
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே, நேற்று 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, உலக நன்மைக்காக, 108 லிட்டர் பாலாபிஷேம் நடந்தது.தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே, சிந்தலக்கரையில், காளிபராசக்தி கோவில், தவசித்தர் பீடம் உள்ளது. இதன், 25வது ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 9 மணியளவில், இங்குள்ள, 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.தவசித்தர் பீட நிறுவனர் ராமமூர்த்தி சுவாமிகள் இதைச் செய்தார். இதன்பின், மும்மத பிரார்த்தனை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ராமமூர்த்தி சுவாமி, தவ பூஜையை துவக்கினார்.