கடலூர் மாவட்டத்தில் கோதாரி கவுரி நோன்பு: கோயில்களில் பூஜை
ADDED :2540 days ago
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமாவாசை நோன்பை (கேதாரி) முன்னிட்டு பெண்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.
நோன்பையொட்டி நேற்று (நவம்., 7ல்) பெண்கள் காலை முதல் விரதம் இருந்து கேதாரேஸ் வரனுக்கு மண் சட்டியில் 21 எண்ணிக்கை கொண்ட அப்பம், பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்களை வைத்து கோயிலுக்குச் சென்று, கலசத்தை 21 முறை வலம் வந்து பூஜை செய்து, வீட்டிற்கு வந்து படையலிடடு விரதத்தை பூர்த்தி செய்வது வழக்கம்
நேற்று (நவம்., 7ல்) அமாவாசை நோன்பையொட்டி, அந்தந்த பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பூஜை செய்தனர்.