சேலம் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி: பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு
சேலம்: சேலம், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில், செவ்வாய்ப்பேட்டை, சித்திரை சாவடி முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், ஏற்காடு ஆறுபடை முருகன் கோவில், ஜாகீர்அம்மாபாளையம், காவிரி பழனியாண்டவர் ஆஸ்ரமம் ஆகியவற்றில் கந்த சஷ்டி திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அனைத்து கோவில்களிலும், நேற்று (நவம்., 8ல்) நடந்த சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலையில் பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று (நவம்., 8ல்), கந்த சஷ்டி விழாவையொட்டி, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சூரசம்ஹாரம் வரும், 13ல், நடக்கிறது.
* அதேபோல், ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் பாலசுப்ரமணியர், வீரகனூர், ராயர்பாளை யம் குமரன் சுவாமி, தம்மம்பட்டி தண்டாயுதபாணி, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.