தாண்டாம்பாளையத்தில் 14ல் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2523 days ago
கொடுமுடி: கொடுமுடி, கொல்லன்கோவில் கிராமம், தாண்டாம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இதை புனரமைக்கும் பணி நடந்தது. கும்பாபிஷேக விழா, வரும், 14ல் நடக்கவுள்ளது. வரும், 13ல் காலையில், மஹா கணபதி, லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. இதையடுத்து தீர்த்தம் எடுத்து வர புறப்பாடு நடக்கிறது. மாலையில் முதற்கால யாக பூஜை, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 14ல் காலை, 5:00 மணிக்கு மஹா கணபதி வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, நாடி சந்தானம் நிகழ்வுகளை தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் யாத்ரா தானம், கோபுர கலச கும்பாபிஷேகம், சக்தி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடப்பதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.