/
கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவில் திருவிளக்கு வழிபாடு
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவில் திருவிளக்கு வழிபாடு
ADDED :2523 days ago
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் (நவம்., 8ல்) துவங்கிய இவ்விழாவின் 2ம் நாளான நேற்று (நவம்., 9ல்) காலையில் சுப்பிரமணியர், ஆறுமுகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சஷ்டி பாராயண வழிபாடு நடந்தது. பூஜையின் முடிவில் ஆறுமுகபெருமான் புஷ்பஅலங்காரத் திலும், சுப்பிரமணியர் சந்தன அலங்காரத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். மதுரை ராமசந்திர பாகவதர் குழுவினரின் திருமுருக பஜனை வழிபாடு நடந்தது.
மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், திருவிளக்கு வழிபாடும் நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கந்தசஷ்டி அமைப்பாளர் கதிரேசன் மற்றும் பக்தர்கள் செய்திருந் தனர்.