உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபியில் சூரசம்ஹார விழா: கோபியில் கோலாகலம்

கோபியில் சூரசம்ஹார விழா: கோபியில் கோலாகலம்

கோபி: கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கோலாகலமாக நடக்கிறது. கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, விநாயகர் பூஜையுடன் நேற்று முன்தினம் (நவம்., 8ல்) துவங்கியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மொத்தம் 11 கலசத்தில், புனித தீர்த்தத்துடன், வரை லட்சார்ச்சனை நடந்தது. அதன்பின் யாகசாலை பூஜை, திரவ்ய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதேபோல், பச்சமலை முருகன் கோவிலில், அபிஷேகம், ஹோமம், சண்முகர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. கோபி, பாரியூர் சாலை, புதுப்பாளையம், முருகன்புதூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !