திருமலையில் 7 டன் மலர்களால் புஷ்பயாகம்
ADDED :2517 days ago
திருப்பதி: திருமலையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பிரம்மோற்ஸவம் முடிந்த பின் வரும், திருவோண நட்சத்திரத்தன்று, புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று மதியம், திருமலையில் புஷ்பயாகம் நடந்தது. இதற்காக, ஸ்ரீதேவி பூதேவி மேத மலையப்பஸ்வாமிக்கு, திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், உற்ஸவமூர்த்திகளை கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.அவர்களுக்கு, சாமந்தி, ரோஜா, அரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, தாழம்பு, தேன்பூ, தாமரை, அல்லி உள்ளிட்ட மலர்கள், துளசி, வில்வம், மரிகொழுந்து, மருவம் உள்ளிட்ட இலைகளாலும், அர்ச்சகர்கள் புஷ்ப யாகத்தை நடத்தினர்.இதற்காக, 7 டன் மலர்கள், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.