உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18ல் கடை ஞாயிறு விழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18ல் கடை ஞாயிறு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, கடை ஞாயிறு விழா துவங்குகிறது.

கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கடை ஞாயிறு விழா நடைபெறும். 18ம் தேதி துவங்கும் இந்த விழா, நான்கு வாரங்கள் நடைபெறும்.இந்த விழாவில், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள, பல கிராம மக்கள் வேண்டுதலை நிறைவேற்ற, மண் சட்டியில் தீபம் ஏற்றி, கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !