உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை கோவிலில் அகண்ட விளக்கு வைக்கப்படுமா?

வல்லக்கோட்டை கோவிலில் அகண்ட விளக்கு வைக்கப்படுமா?

வல்லக்கோட்டை:இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியும், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், அகண்ட விளக்கு அமைக்கவில்லை.கோவில்களில், தீ விபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும், அகல் விளக்கு விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் தீ விபத்தைத் தடுக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னமும், கோவிலின் உள்ளே தீபம் ஏற்றப்படுகிறது. அகண்ட விளக்கு வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தீ விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, அகண்ட விளக்கு வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !