உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் பிரச்னைகள் குறித்து ஆன்-லைனில் புகார் அளிக்கலாம்

ராமேஸ்வரம் கோயில் பிரச்னைகள் குறித்து ஆன்-லைனில் புகார் அளிக்கலாம்

ராமேஸ்வரம்: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் நிர்வாகம், புகார்களை பதிவு செய்ய இந்து சமய அறநிலைத்துறை
செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.ராமநாதசுவாமி கோயில் அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகம், மற்றும் புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இணையச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.தேசிய தகவலியல் மையம் மூலம் http://gdp.tn.gov.in./hrce என்ற இந்த செயலியில் கோயில்கள், அவற்றின் நிர்வாகம், முறை கேடுகள் என இந்து சமய அறநிலைத் துறைக்கு அனுப்பும் மனுக்கள் அனைத்தும் தொடர் புடைய அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். புகார்களை சமர்ப்பிக்கும் போது மனுதாரருக்கும் குறுஞ்செய்தி, ஒப்புகை சீட்டு அனுப்பி வைக்கப்படும். மனுக்களின் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் புகார் அளித்தவர் அறிந்து கொள்ள முடியும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டிலுள்ள கோயில்களின் அடிப்படை தகவல்கள், அவற்றின் நிலங்களுக்கான புவிசார் தகவல் அமைப்பு மற்றும் கோயிலின் அமைவிடங் களையும் இதன் மூலம் கண்டறிய முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !