உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாச்சேத்தியில் மகா யக்ஞ வழிபாடு

திருப்பாச்சேத்தியில் மகா யக்ஞ வழிபாடு

 திருப்புவனம்: திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி நவ.29, 30 தேதிகளில் மகா யக்ஞ பூஜை நடைபெற  உள்ளது.திருப்பாச்சேத்தியில் ஆயிரத்து 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவாலயம் அழகியநாதர் திருக்கோயில், நள மகராஜாவால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீஜ்வாலா  ப்ரயோக சென்ட்ரல் டிரஸ்ட், ஸ்ரீ ஜ்வாலா டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பாக உலக நன்மை வேண்டி நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் மகா யக்ஞம் பூஜை நடைபெற உள்ளது. ஸ்ரீதர் குருஜி  தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் பூஜையில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்கின்றனர். 29ம் தேதி காலை தொடங்கப்படும் பூஜை 30ம் தேதி மாலை ஆறு மணிக்கு  முடிவடைகிறது.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !