உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலைபெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீப விழா

ஆனைமலைபெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீப விழா

பொள்ளாச்சி: ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், மகா விஷ்ணு தீபத்திருவிழா நடந்தது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், கார்த்திகை மகா விஷ்ணு தீபத்திருவிழா நடந்தது.விழாவையொட்டி, காலை, 10:40 மணிக்கு திருமஞ்சன சேவை, அலங்கார சேவைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு பூஜைகளும் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, மகா விஷ்ணு தீபம் ஏற்றுதல், தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !