திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை : பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2565 days ago
திருப்பூர்: ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜையையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருப்பூர் காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், 59வது ஆண்டு, மண்டல பூஜை, கடந்த, 17ல், கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. இன்று, கொடியேற்றம் மற்றும் கணபதி ேஹாமத்துடன் உற்சவ பூஜை துவங்குகிறது.அடுத்து வரும், ஐந்து நாட்களில், கணபதி ேஹாமத்துடன் நலகலச அபிேஷகம், பறையெடுப்பு, பெருமாள் கோவிலுக்கு ஆறாட்டுக்கு புறப்படுதல் உள்ளிட்ட பூஜையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.மண்டல பூஜையை முன்னிட்டு. ஜன., 6ம் தேதி வரை, வாரந்தோறும் ஞாயிறன்று ஐயப்ப சுவாமி கோவிலில், காலை, 11:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. நேற்று நடந்த அன்னதான நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்றனர்.