தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் சோமவார சங்காபிஷேகம்
ADDED :2508 days ago
தும்பைப்பட்டி, சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் கார்த்திகை மாதம் இரண்டாம் சோமவார 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர், சங்கர நாராயணனர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.