திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உண்டியல் வருமானம்
ADDED :2811 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான சொக்கநாதர் கோயில் அங்காளபரமேஸ்வரி , குருநாத சுவாமி கோயில், பால்சுனைகண்ட
சிவபெருமான் கோயில், பழனி ஆண்டவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று 28ல், துணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் திறந்து எண்ணப் பட்டது. ரூ. 23 லட்சத்து 64 ஆயிரத்து 955. தங்கம் 179 கிராம், வெள்ளி ஒரு கிலோ 425 கிராம் இருந்தது.கோயில் கண்காணிப்பாளர் கல்யாண சுந்தரபாண்டியன், பணியாளர்கள், வேத பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஐயப்பா சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.