ஓசூர் காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2601 days ago
ஓசூர்: ஓசூர் அருகே நடந்த, காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஓசூர் சிப்காட் 2 மோரனப்பள்ளி பகுதியில், மகா பிரத்யங்கரா தேவி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், காலபைரவர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 30ல் காலை துவங்கியது. நேற்று (டிசம்., 2ல்) காலை, 9:00 மணிக்கு, பெங்களூரு நரேந்திரபாபு சர்மாஜி சுவாமிகள், சப்தகிரி அம்மாள் ஆகியோர் தலைமை யில், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கால பைரவ பாராயண ஹோமம், கும்பம் புறப் படுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.