உடுமலை சீனிவாசா பெருமாள் கோவிலில் கூர்மாவதார அலங்காரம்
ADDED :2640 days ago
உடுமலை: உடுமலை, சீனிவாசா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நவநீத கிருஷ்ண சுவாமிகளுக்கு நேற்று கூர்மாவதார அலங்காரம் நடந்தது. உடுமலை, பெரியகடை வீதி, சீனிவாசா பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 8ம்தேதி துவங்கியது. பகல் பத்து உற்சவம் 8ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலை, 4:00 மணிக்கு நடந்தது. பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள் பாடப்பட்டது. சீனிவாச பெருமாள், கூர்மாவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, ஹயக்ரீவ அவதார அலங்கார பூஜை நடக்கிறது.