விழுப்புரத்தில் வள்ளலார் உபகாரச் சாலைஅன்னதான துவக்க விழா
ADDED :2527 days ago
விழுப்புரம்:விழுப்புரத்தில் வள்ளலார் உபகாரச் சாலை சார்பில், தொடர் அன்னதான துவக்க விழா நடந்தது.விழுப்புரம் ரயில்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாலகிருஷ்ண பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தமிழ்வேங்கை தலைமை தாங்கினார். அருட்பா பாடகர் இளங்கோ வரவேற்றார்.தொடர் அன்னதானத்தை அன்பழகன் துவக்கி வைத்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் பாலு, சுத்த சன்மார்க்க நெறியாளர்கள் வெங்கடேசன், ஏழுமலை கண்ணன், பூங்காவனம், மக்கள் பாதுகாப்புக் கழக தலைவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சன்மார்க்க நெறியாளர் மங்கையர்க்கரசி நன்றி கூறினார்.