உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரியமாணிக்கம் பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கரியமாணிக்கம் பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (12ம் தேதி) நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் ஆலஞ்சாலை ரோட்டில் பொறையாத்தம்மன் கோவில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று (12ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, விமானத்தில் கலசம் பதித் தல், பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்ததுமாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. இன்று 12ம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை 6 மணிக்கு மூலவர் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சி யும், காலை 11 மணிக்கு பொறையாத்தம்மன் னுக்கு விமான கும்பாபி ஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஏரிப்பாக்கம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !