ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து 6ம் நாள்
ADDED :2527 days ago
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து உற்சவத்தின் ஆறாம் நாளான இன்று நம்பெருமாள் முத்து சாயக்கொன்டை, மகர ஹன்டி, மார்பில் மகாலெட்சுமி பதக்கம், முத்து அபய ஹஸ்தம், நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து மூலஸ்தானத்தில் இருந்து, அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ராஜகோபுரங்கள் மின்னொலியில் ஜொலிக்கின்றன.