ஈரோடு சித்தி விநாயகர் கோவிலில் பாலாலயம்
ADDED :2571 days ago
ஈரோடு: சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாலாலயம் நடந்தது. ஈரோடு மாநகராட்சி, 54வது வார்டு, நக்கீரர் வீதி, சித்தி விநாயகர், புது எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், ஜன., 23ல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கோவில் திருப்பணிக்காக, மூலவர் மூர்த்திகள் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.