ராமேஸ்வரம் கோயிலில் நடராஜருக்கு காப்புக்கட்டு
ADDED :2504 days ago
ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடராஜருக்கு(சபாபதி) கோயில் குருக்கள் காப்பு கட்டினார். தொடர்ந்து மாணிக்கவாசகர், பஞ்ச மூர்த்திகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முதல் டிச.,22 வரை கோயிலில் மாணிக்கவாசகர் புறப்பாடாகி மூன்றாம் பிரகாரம் வழியாக உலா வருவார். பின் டிச.,23ல் நடராஜர் சன்னதி முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவாசகம் பாடியதும் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிப்பார்.