சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில், நவமி விழா
ADDED :2815 days ago
சின்னாளபட்டி : மேலக்கோட்டை, அம்பாத்துரை ரோடு பக்த ஆஞ்சநேயர் கோயிலில், நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரவிய அபிஷேகத்துடன், வெண்ணெய் காப்பு, துளசி, வெற்றிலை மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடைபெற்ற விசேஷ பூஜையில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், நவமி விசேஷ அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.