காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் அமைப்பு
ADDED :2586 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், பரிகாரத்திற்காக தீபம் ஏற்ற வரும் பக்தர்கள், அகண்ட விளக்கில் நெய் ஊற்றாமல், அவர்கள் கைகளால் தனித்தனியாக தீபம் ஏற்ற வேண்டும் என, நினைக்கின்றனர்.இதனால், கோவில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம், தரைப்பகுதியில், ஆங்காங்கே தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். இதனால், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, கொடிமரம் அருகில், பாதுகாப்பு அம்சங்களுடன், உலோகத்தால் செய்யப்பட்ட விளக்கு மாடம் அமைக்கப்பட்டுள்ளது.