உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் மோகன அலங்காரத்தில் பெருமாள்

உலகளந்த பெருமாள் கோவிலில் மோகன அலங்காரத்தில் பெருமாள்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக தேகளீசபெருமாள் மோகன அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் கடந்த 8ம் தேதி துவங்கியது. நிறைவாக நேற்று மாலை 4:30 மணிக்கு தேகளீச பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். மாலை 6:00 மணிக்கு பெருமாள் பாண்டிய மண்டபத்தில் உபயநாச்சியாருடன் ஆழ்வார்கள் புடைசூழ எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை சொர்க்கவாசல் திறப்புவிழாவை தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கமும், ராபத்து உற்சவம் ஆரம்பமாகிறது.விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !