திருக்கோவிலூர் தபோவனத்தில் நவசண்டி ஹோமம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்த கிரி சுவாமிகளின் 45ம் ஆண்டு ஆராதனை விழாவில் நேற்று (டிசம்., 21ல்) நவசண்டி ஹோமம் நடந்தது.
திருக்கோவிலூர், தபோவனத்தில் உள்ள ஞானானந்த கிரி சுவாமிகளின் 45ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (டிசம்., 21ல்) காலை 6:00 மணிக்கு மகாருத்ர ஹோமம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடாகி அதிஷ்டானத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 9:00 மணிக்கு நவசண்டி ஹோமம் நடந்தது. மதியம் 12:40 மணிக்கு பூர்ணாஹூதி, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும் அதிஷ்டான வளாகத்தில் கிருஷ்ண யஜூர்வேத பாராயணம், மகாருத்ர ஜபம் லட்சார்த்தனை நடந்தது.
நாளை 23ம் தேதி காலை 8:00 மணிக்கு அதிஷ்டானத்தில் 108 கலச அபிஷேகம் சகஸ்கர சங்காபிஷேகம், 8:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடராஜர் அபிஷேகம் ஊடல் உற்சவமும், விழாவின் நிறைவாக 24ம் தேதி காலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், 10:15 மணிக்கு ஆராதனை, தீர்த்தநாராயண
பூஜை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.