சபரிமலையில் கற்பூர பாத்திரம் சுழற்றி எஸ்.பி., வழிபாடு
ADDED :2493 days ago
சபரிமலை: மண்டல பூஜைக்கு முன்னோடியாக சபரிமலையில் தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீஸ் சார்பில் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பூஜை நடைபெறும். அகன்ற பாத்திரத்தை இரும்பு கம்பியில் இணைத்து அதில் கற்பூரம் போட்டு எரிய வைத்த பின், அதை அசைத்தபடி ஊர்வலம் செல்லும்.ஊர்வலத்தில் புலி மீது ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள தாளத்துடன் பக்தர்கள் அணி வகுத்து வருவர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், இது நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் 22,23 தேதிகளில் இரவில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் சார்பில் நடைபெற்ற பவனி 18ம் படி அருகே வந்த போது, கற்பூரம் எரியும் பாத்திரத்தின் ஒரு பக்கத்தை எஸ்.பி.,ஜெயதேவ் பிடித்து சுழற்றியது பக்தர்களை கவர்ந்தது.போலீசும் ஐயப்ப பக்தர்கள் தான் என்பதை அவர் உணர்த்தினார்.