உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவ விழா

குமாரபாளையம் ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவ விழா

குமாரபாளையம்: குமாரபாளையம், ஐயப்பன் கோவிலில், பிரம்மோற்சவ விழா நடந்தது. குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா மற்றும் மண்டல பூஜை நடப்பது வழக்கம்.

கடந்த, 15ல் கொடியேற்றத்துடன், 24ம் ஆண்டு விழா துவங்கியது. நேற்று முன்தினம் (டிசம்., 25ல்) இரவு, கோவில் கமிட்டி சார்பில், மண்டல பூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் நடந்தது. நாச்சி முத்து குருசாமி தலைமை வகித்தார். இதில், ஐயப்ப சுவாமி, விநாயகர், முருகன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

பக்தி பாடல்கள் பாடப்பட்டன. ஜன., 14ம் நாள் மாலை, 6:00 மணிக்கு கற்பூர ஆழி பிரதட்சணம், மகா ஜோதி தரிசனம்; மறுநாள் அரங்கநாதர் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !