பாரியூர் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ADDED :2579 days ago
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து, குண்டமிறங்கும் பக்தர்கள், விரதம் கடைபிடிக்க துவங்கியுள்ளனர். முக்கிய நிகழ்வாக, 2019 ஜன.,7ல் சந்தனக்காப்பு அலங்காரம், 10ல் திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.,11ல் தேரோட்டம், 12ல் மலர்பல்லக்கு உற்சவம், 19ல் மறுபூஜை நடக்கிறது.