உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் தேரை புதுப்பிக்க வலியுறுத்தல்

அருணாசலேஸ்வரர் தேரை புதுப்பிக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் தங்கத்தேரை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில், ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மய்ய தொகுதிப் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் அருள் தலைமை வகித்தார். திருவண்ணாமலை- திண்டிவனம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, உடனடியாக துவங்க வேண்டும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, மூன்று ஆண்டுகளாக, பழுதடைந்துள்ள தங்கத்தேரை புதுப்பிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !